திமுக அரசோட சின்ன புத்தி இதுதான்… பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கடும் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 June 2023, 4:29 pm

சென்னை விமான நிலையம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் எச்.ராஜா, கரு.நாகராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் பகுதிக்கு அமித் ஷா கார் வந்ததும், அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. அமித் ஷா, விமான நிலையத்திற்கு வெளியே சாலையில் நடந்து சென்று, தொண்டர்களின் வரவேற்பை ஏற்ற சமயத்தில் திடீரென சாலையில் இருந்த எல்லா மின் விளக்குகளும் அணைத்தன.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையின்போது மின் தடை ஏற்பட்டது குறித்து, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இசட் பிளஸ் பாதுகாப்பில் இருப்பவர். அமித்ஷா வருகைக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும்.

உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததற்கு தமிழ்நாடு அரசே காரணம். அமித்ஷா வந்த போது, மின் வெட்டு நேரிட்டது தமிழ்நாடு அரசின் சின்ன புத்தியை காட்டுகிறது.” என காட்டமாக விமர்சித்துள்ளார் எச்.ராஜா.

  • blue sattai maran crticize 3bhk movie as casagrand advertisement அப்போ இது Casagrand விளம்பரமா? படம் இல்லையா? -3BHK படத்தை கண்டபடி விமர்சித்த பிரபலம்!