சரத்குமாரா..? ராதிகா-வா…? எங்களுக்கு ஓகே தான்… கனிமொழியை தோற்கடித்தால் போதும் ; தூத்துக்குடி பாஜக விருப்பம்…!!

Author: Babu Lakshmanan
18 March 2024, 9:48 pm

தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் நடிகை ராதிகா அல்லது சூப்ரீம் ஸ்டார் சரத்குமார் பாஜக சார்பில் வேட்பாளராக அறிவித்தால் நாங்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம் என பாஜக தமிழ் இலக்கிய மற்றும் நலன் பிரிவு மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, திமுக சார்பில் கனிமொழி மீண்டும் போட்டியிடுவார் என தெரிகிறது. இந்த நிலையில், அவரை எதிர்த்த கடந்த 2019 பாரளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக களம் கண்ட தமிழிசை சௌந்தர்ராஜன் 3 லட்சம் வாக்குகள் குறைவாக பெற்று படுதோல்வியை சந்தித்தாலும், அவருக்கு தெலுங்கான ஆளுநர் பதவியை வழங்கி பாஜக தலைமை கௌரவப்படுத்தியது.

இந்நிலையில், தற்போது 2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா, ஒபிசி அணி விவேகம் ரமேஷ், பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் உள்ளிட்டோர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், கனிமொழியை எதிர்த்து வலுவான வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என தூத்துக்குடியில் பாஜகவினர் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் இலக்கிய மற்றும் நலன் பிரிவு மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன், தூத்துக்குடியில் சச்யதிளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், வருகிற 2024 பாராளுமன்ற தேர்தல் வருவது நமக்கெல்லாம் தெரியும் குறிப்பாக, 2014ல் நரோந்திர மோடி அவர்களுடைய அரசானது 282 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஆட்சியாக ஐந்தாண்டு இருந்தது. அதன் தொடர்ச்சியாக 2019ல் 303 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட தனிபெரும் கட்சியாக கடந்த 10 ஆண்டுகள் நல்லாட்சி தந்து கொண்டிருக்கின்றார்.

வரக்கூடிய 2024 பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியானது சுதந்திர போராட்ட வீரர்கள், சுதந்திரத்திற்காக பாடுபட்ட முக்கியமான தலைவர்கள் உள்ளடக்கிய பகுதி, இந்த தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து கடந்த ஐந்து ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கனிமொழி அவர்கள் கடந்த 5ஆண்டுகள் தொகுதிக்கு ஏதுவும் செய்யாத நிலையை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

திரும்பவும் அவரே திமுக சார்பில் போட்டியிடக்கூடிய நிலை உள்ளது. பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரையிலே வேட்பாளர் நிறுத்தப்படவுள்ளார். குறிப்பாக கட்சியுனுடைய தலைமையானது ஒரு நல்ல வேட்பாளரை, மிகச் சிறந்த ஒரு வேட்பாளரை, மக்கள் மத்தியில் அறிமுகமான ஒரு வேட்பாளரை, இந்த கட்சியினுடைய கொள்கை, சித்தாத்தம் அத்தனையும் தெரிந்த மூத்த உறுப்பினைரை, கட்சியினுடைய விபரம் தெரிந்தவரை, அதே நேரத்தில் எந்த வகையிலும் விலை போகாத ஒரு நபரை கட்சினுடைய தலைமை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதில் ஒட்டுமொத்த கோரிக்கையாக நாங்கள் இருந்துகொண்டிருக்கிறோம்.

யாரை நிறுத்தினாலும், கட்சியினுடைய கொள்கை சித்தாந்தத்தில் ஊறித்திளைத்தவர்கள், நாடி நரம்பு ரத்த நாளங்கள், கட்சியினுடைய உணர்வு இருக்கக்கூடிய ஒரு நபராக அந்த வேட்பாளர் இருக்க வேண்டும், நிச்சயமாக பாரதிய ஜனதா கட்சியின் ஒட்டுமொத்தமாக நிர்வாகிகள் தொண்டர்கள் ஓரணியில் நின்று தேர்தல் பணியாற்ற நாங்கள் மும்முரமாக இருந்து கொண்டிருக்கிறோம். அப்படியிருக்கும் பட்சத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறுவது உறுதி தமிழகத்திலும் பாரதத்தின் பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் சாதனைபடைக்க இருக்கின்றார்.

சமீபத்தில் கட்சியில் இணைந்த நடிகை ராதிகா போட்டியிடுவதாக கட்சியின் தலைமை அறிவித்தால் அதன் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். நடிகை ராதிகாவை பொறுத்தவரையில், அவர் இருக்கின்ற சட்சியை எங்களுடன் இணைத்திருக்கின்றார். கூட்டணியாக வரவில்லை. எங்கள் கட்சியோடு இணைந்திருக்கிறார்கள், அப்படியொரு ஒரு முடிவை கட்சி தலைமை எடுத்தாலும் கூட அவரோ, அவருடைய கணவர் சூப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவர்களோ, இங்கு போட்டியிடுவதாக இருந்தால், நிச்சயமாக அவர் பிரபலம் ஆனவர், இதற்கு முன்னால் பல தேர்தல்களை சந்தித்தவர். இதே தொகுதியில் போட்டியிட்டவர் அவர் வேட்பாளராக இருந்தாலும் கூட நாங்கள் ஏற்றுக்கொள்வதற்கு தயராக இருக்கின்றோம், எனக் கூறினார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?