குடும்பம் நடத்தி விட்டு ரூ.30 லட்சம் மோசடி… முன்னாள் காதலியை ஏமாற்றிய முன்னாள் அமைச்சரின் மகன்..? கொலை மிரட்டல் விடுப்பதாக பரபரப்பு புகார்…!!

Author: Babu Lakshmanan
23 January 2024, 5:45 pm

தூத்துக்குடி அருகே வீடு வாங்குவதற்காக 30 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 35 பவுன் நகைகளை வாங்கி ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சரின் மகன் மீது முன்னாள் காதலி சுகந்தி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தூத்துக்குடியை சேர்ந்தவர் சி.த.செல்லபாண்டியன். இவர் அதிமுக முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆவார். தற்போது அதிமுக வர்த்தக அணியில் மாநில பொறுப்பில் பதவி வகித்து வருகிறார். இவரது மகன் ஜெபசிங் இவருக்கு திருமணம் ஆகி ஏற்கனவே மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், ஜெப சிங்கிற்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிந்த சுகந்தி என்ற பெண்ணுக்கும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு, இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்தனர். வீட்டை விட்டு வெளியேறிய ஜெபசிங், சுகந்தியுடன் தனியாக வீடு எடுத்து தங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளார்.அப்போது, வீடு ஒன்று வாங்குவதற்காக ஜெபசிங் சுகந்தியிடம் பணம் மற்றும் நகைகளை கேட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, சுகந்தி ஜெபசிங்கிற்கு தன்னிடம் இருந்த 30 லட்ச ரூபாய் பணம் மற்றும் 35 பவுன் தங்க நகைகளை அடகு வைத்து வீடு வாங்க கொடுத்துள்ளார். ஆனால், வீட்டை ஜெபசிங் அவரது பெயரில் பத்திரம் முடித்துள்ளார். இந்நிலையில் தற்போது அந்த வீட்டை விற்க முன்னாள் அமைச்சர் சி.த. செல்லபாண்டியன் அட்வான்ஸ் தொகையாக பெற்று உள்ளதாக கூறப்படுகிறது

இதன் காரணமாக ஆத்திரமடைந்த சுகந்தி, காதலன் ஜெப சிங்கிடம் தனது பெயரில் வீட்டை மாற்றி தர வேண்டும், இல்லையென்றால் தனக்குரிய ரூபாய் 30 லட்சம் மற்றும் தங்க நகைகளை உடனே திருப்பித் தர வேண்டும் என கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, ஜெபசிங் மற்றும் முன்னாள் அமைச்சர் சி.த.செல்ல பாண்டியன் ஆகியோர் சுகந்திக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்து வருவதாகவும், மேலும் ஜெபசிங் தன்னை தாக்கியதாகவும் தெரிவித்துள்ள சுகந்தி, இது தொடர்பாக இன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செல்ல பாண்டியன் மகன் ஞானராஜ் ஜெபசிங் மீது புகார் அளித்துள்ளார்.

தற்போது காதலன் ஜெபசிங்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனியாக கடந்த 5 மாதங்களாக தனது தாய் வீட்டில் வசித்து வரும் சுகந்தி, தற்போது முன்னாள் அமைச்சர் சி.த. செல்லபாண்டியன் மகனும், காதலனுமான ஜெபசிங் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த. செல்லபாண்டியன் மகன் ஞானராஜ் ஜெபசிங், இவர் முந்திரி பருப்பு லாரியை கடத்தியதாக கடந்த 2022 ஆம் ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்ற பின் இது குறித்து சுகந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறுகையில், நான் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்ட அவர், இது குறித்து விரைவில் நீதிமன்றத்தை நாட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!