தூத்துக்குடி ரவுடி என்கவுண்டர் விவகாரம் : தோட்டாக்கள் எங்கே? தேடும் பணியில் காவல்துறை!!

Author: Udayachandran RadhaKrishnan
28 October 2021, 1:45 pm
Rowdy Encounter -Updatenews360
Quick Share

தூத்துக்குடி : போலீஸ் என்கவுண்டர் மூலம் ரவுடி சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் துப்பாக்கி சூடு நடத்திய இடத்தில் வானத்தை நோக்கி சுட்ட குண்டுகளை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள முன்னீர்பள்ளம் பகுதியை சேர்ந்த ஒருவரை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த துரைமுருகன்.

இவர் மீது புதுக்கோட்டை, மதுரை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் 35க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதில் 7 வழக்குகள் கொலை வழக்குகள் ஆகும்.

இவன் பெண்களை பின் தொடர்ந்து செல்வது தட்டிக் கேட்பவரை கடத்திச் சென்று கொலை செய்து தடம் தெரியாமல் புதைத்து விடுவது போன்ற குற்றச்செயல்களை வழக்கமாக கொண்ட சைக்கோ கொலையாளி என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வழக்கு சம்பந்தமாக முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தையாபுரம் பீச் கடற்கரையில் துரைமுருகன் பதுங்கி இருப்பதாகஅவனது செல்போன் டவர் மூலம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து கடந்த 15ஆம் தேதி தனிப்படை உதவி ஆய்வாளர் ராஜபிரபு மற்றும் காவலர் டேவிட் ராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் ரகசிய தகவலின் பெயரில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் ராஜபிரபு தனது படையுடன் சென்று அவரை கைது செய்ய சென்றுள்ளார்

அப்போது துரைமுருகன் காவல்துறையினரை எதிர்த்து தாக்கியதாகவும், தப்பி ஓட முயன்றதல் ரவுடி துரைமுருகனை உதவி ஆய்வாளர் ராஜபிரபு வானத்தை நோக்கி எச்சரிக்கை செய்து முதலில் எச்சரித்தார். ஆனால் ரவுடி துரைமுருகன் காவலர் டேவிட் ராஜனை அரிவாளால் வெட்ட முயற்சி செய்துள்ளான்.

இதையடுத்து மேலும் எச்சரித்த போது, போலீசாரின் கையில் அரிவாளால் வெட்டியதால் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ளவும் தன்னுடன் வந்த காவலர் டேவிட் ராஜன் ஐ காப்பாற்ற உதவி ஆய்வாளர் ராஜ பிரபு ரவுடி துரைமுருகனை நோக்கி சுட்டதில் அவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையில் காவல்துறையினர் வானத்தை நோக்கி சுட்டதாக கூறப்படுகின்ற துப்பாக்கி தோட்டாவை தேடும் பணியில் ஈடுபட்டு தேடி வருகின்றனர்.

இதனால் அந்த பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 228

0

0