தகாத உறவில் இருந்த பெண்ணுக்காக இரு ஆண்கள் போட்டி.. அய்யனார் கோயில் அருகே இறுதியான முடிவு!

Author: Hariharasudhan
4 February 2025, 12:52 pm

சேலத்தில், தகாத உறவில் இருந்த பெண்ணுக்காக ஒருவரை கொலை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம்: சேலம் மாவட்டம், வீராணம் வீமனூர் காட்டுவளவை என்ற பகுதியைச் சேர்ந்தவர் குமரவேல் (29). இவர் டெம்போ ஓட்டுநராக பணியாற்றி வந்தார். மேலும், இவர் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, தனது உறவுக்கார பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில், குமரவேலுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளார். இதனிடையே, அப்பெண்ணுக்கு வீராணம் அடுத்த துளசிமணியனூரைச் சேர்ந்த பிரகாஷ் (38) என்பவருடனும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

எனவே, அவரும் அடிக்கடி அப்பெண்ணின் வீட்டிற்கு வந்து தனிமையில் உல்லாசமாக இருந்துவிட்டுச் சென்றுள்ளார். இந்த விவகாரம், குமரவேலுக்கு தெரிய வந்துள்ளது. எனவே, அவர் பிரகாஷைக் கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

Man killed for Extramarital affair in Salem

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், குமரவேல், அப்பகுதியில் உள்ள அய்யனாரப்பன் கோயில் அருகே மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்களான மாணிக்கம், கனகராஜ் ஆகியோர் வந்து, அந்த பெண்ணுடன் இருக்கும் தொடர்பை கைவிடும்படி கூறி தகராறு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னை இரட்டைக் கொலை.. 4 வருடங்கள் கழித்து டெல்லியில் சிக்கிய டைல்ஸ் தொழிலாளி!

இதில் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பிரகாஷ், குமரவேலை தாக்கி கீழே தள்ளிவிட்டு, கத்தியால் அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். பின்னர், மூவரும் அங்கிருந்து தப்பி உள்ளனர். இதனையடுத்து, இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பிரகாஷ், மாணிக்கம் மற்றும் கனகராஜ் ஆகிய மூன்று பேரையும் நள்ளிரவிலே கைது செய்தனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!