குட்டை நீரில் மூழ்கி மூன்று சிறுவர்கள் பலி : ஈரோடு அருகே சோகம்!!

6 November 2020, 12:24 pm
3 Child Dead - Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலத்தை அடுத்துள்ள புஞ்சைபுளியம்பட்டி வெங்கநாயக்கன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மூன்று பள்ளி மாணவர்கள் குட்டை நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி வெங்கநாயக்கன்பாளையம் ஊராட்சி அரிஜன காலணியில் வசிக்கும் கூலி தொழிலாளர்கள் மகன்கள், அங்குள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தனர்.

திலீப்குமார் (வயது 12), மௌலிதரன் (வயது 12) ஜீவானந்தம் (வயது 12) உள்ளிட்ட ஐந்து சிறுவர்கள் அந்த கிராமத்தில் உள்ள குட்டையில் நேற்று மாலை குளிக்கச் சென்றனர். அப்போது நீச்சல் தெரியாததால் ஆழமான பகுதிக்கு சென்ற மாணவர்கள் நீரில் தத்தளித்து கூச்சலிட்டுள்ளனர்.

திலீப்குமார், மௌலிதரன், ஜீவானந்தம் ஆகியோர் நீரில் மூழ்கியதை அடுத்து, உடன் சென்ற நண்பர்கள் கிராமத்திற்கு வந்து பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சத்தியமங்கலத்தில் இருந்து தீயணைப்பு துறையினர் வந்து சம்பவ இடத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

திலீப்குமார், மௌலிதரன் ஆகிய இருவரது உடல்கள் முதலில் மீட்கப்பட்டது. நீண்ட நேரத்திற்கு பிறகே ஜீவானந்தம் உடல் மீட்கப்பட்டது. குட்டை நீரில் மூன்று சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 13

0

0