கோவையில் ரயில் மோதி மூன்று யானைகள் பரிதாப பலி..!

Author: kavin kumar
26 November 2021, 10:18 pm
Quick Share

கோவை: கோவை அருகே ரயில் மோதி தாய் மற்றும் குட்டியானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் நவக்கரை அருகே கேரளாவில் இருந்து கோவை நோக்கி ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், தாய் யானை மற்றும் இரண்டு குட்டியானைகள் ரயில் தண்டவாளத்தை கடக்க முற்பட்டன. அப்போது எதிர்பாராத விதமாக ரயில் அந்த யானைகள் மீது மோதியதில் மூன்று யானைகளும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளன.
இதுகுறித்து ரயில் பயலட் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில், வனத்துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

Views: - 309

0

0