அரசு பள்ளிகளை குறிவைத்து தாக்கும் கொரோனா: அடுத்தடுத்து 3 ஆசிரியர்களுக்கு கொரோனா…
Author: kavin kumar19 January 2022, 7:11 pm
தருமபுரி: தருமபுரி அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது. மேலும் நான்கு பேருக்கு அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா மூன்றாவது அலை உருவாகி உள்ளது. இதனால் கொரோனா பரவலை தடுக்க பொதுஇடங்களில் வரும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. மேலும் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. அதே போல் தருமபுரி மாவட்டத்திலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டாலும் பள்ளிகளுக்கு ஆசியர்கள் வழக்கம் போல் வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் வழக்கம் போல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் தருமபுரியில் உள்ள அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 3 ஆயிரத்து473 மாணவிகள் படித்து வருகின்றனர். 124 ஆசிரியர்கள் உள்ளனர். தற்போது இப்பள்ளியில் உள்ள 3 ஆசிரியர்களுக்க கொரோ கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்பள்ளியில் பணியாறும் நான்கு ஆசிரியர்களுக்கு கொரோனா அறிகுறி உள்ளதாக கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. அரசுபள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் சக ஆசிரியர்கள் அச்சத்தில் உள்ளனர்.
0
0