20 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி மீது குண்டர் சட்டம்

Author: Udhayakumar Raman
9 October 2021, 10:42 pm
Quick Share

சென்னை: சென்னை அருகே 5 கொலை உள்ளிட்ட 20 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கதிரவன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

சென்னை பெரம்பூர் அகரம் பகுதி பார்த்தசாரதி தெருவை சேர்ந்தவர் கதிர் என்கின்ற கதிரவன். இவர் மீது மாதவரம் , வில்லிவாக்கம் , கொடுங்கையூர் , செம்பியம் ,ஓட்டேரி ஆகிய 5 காவல் நிலையங்களில் 5 கொலை வழக்கு உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த கதிரவனை கடந்த 2 மாதத்திற்கு முன்பு செம்பியம் போலீசார் கஞ்சா வழக்கில் கைது செய்து புழல்  சிறையில் அடைத்தனர்.மேலும் தொடர்ந்து அவர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க சென்னை மாநகர கமிஷனருக்கு செம்பியம் இன்ஸ்பெக்டர் பரிந்துரை செய்தார். அதனடிப்படையில் கதிரவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சென்னை மாநகர கமிஷனர் உத்தரவிட்டார். இதனை அடுத்து தற்போது புழல் சிறையில் உள்ள கதிரவன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Views: - 114

0

0