புகழ் வழியை பின்பற்றுகிறாரா ஜி.பி.முத்து: கண்ணீருடன் பதிவிட்ட வீடியோ….ரசிகர்கள் குஷி…!!

14 April 2021, 5:59 pm
Quick Share

டிக்டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமான ஜி.பி.முத்து தற்போது கார் ஒன்றை வாங்கியுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ஜி.பி.முத்து. தனது பெயரை குழந்தைகளுக்கு கூட தெரியும் அளவிற்கு டிக்டாக் மூலம் பட்டிதெட்டியெல்லாம் பிரபலமானவர். தனக்கு என என தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள முத்துவிற்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

பழைய கதவு, ஜன்னல் உள்ளிட்டவைகளை வாங்கி அதனை பழுது நீக்கி விற்பனை செய்யும் மரக்கடை ஒன்றை நடத்தி வந்தார். தொடக்கத்தில் வெறும் பொழுது போக்கிற்காக ஆரம்பித்த டிக்டாக் பின்னர் முழு நேர தொழிலாளது. பின்னர் டிக்டாக்கில் வாழ்ந்து வந்த ஜி.பி.முத்துவிற்கு டிக்டாக்கிற்கு விதிக்கப்பட்ட தடை பேரிடியாக அமைந்தது.

pugazh gp - updatenews360

டிக்டாக் தடையால் மிகவும் மனம் உடைந்த அவர், பிரதமர் மோடிக்கெல்லாம் கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டார். டிக்டாக் தடை காரணமாக இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து அவர் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில், குடும்ப பிரச்சனை காரணமாக சமூக வலைதளங்களில் வீடியோ பதிவேற்றம் செய்ய முடியவில்லை என்று வருத்தத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டார் ஜி.பி முத்து.

இதுபோதாது என பெண் டிக்டாக் பிரபலம் ரவுடிபேபி சூர்யாவுடன் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளத்தில் வலம் வந்து கொண்டிருந்தார். அதனை தொடர்ந்து, தனியார் தொலைக்காட்சி காமெடி ஷோக்களில் தோன்றி ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார். இதன் மூலம் அவரது மார்க்கெட் உயர தொடங்கியது. இந்நிலையில் ஜிபி முத்து Second Handed கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

தற்போது, இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள முத்து, தனது பரம்பரையிலேயே கார் வாங்கிய முதல் நபர் தான் என்றும் ஆனந்த கண்ணீடன் தெரிவித்துள்ளார். ஜி.பி.முத்துவின் புதிய கார் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. சமீபத்தில் குக் வித் கோமாளி மூலம் புகழ்பெற்ற நடிகர் புகழ் கார் ஒன்றை வாங்கி, இதுகுறித்த வீடியோவை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 32

0

0