கோர விபத்து : 3 பேர் பலி.! நெஞ்சை உறைய வைத்த காட்சி.!!

3 August 2020, 7:20 pm
Tirupur Accident Dead - Updatenews360
Quick Share

திருப்பூர் : கார் கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தனியார் கல்லூரியில் பயின்று வரும் மாணவர் சுபாஷ். இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் நண்பரின் பிறந்தநாள் விழாவிற்காக திருப்பூரை அடுத்த கொடுவாய் பகுதிக்கு காரில் வந்திருந்தனர்.

பிறந்தநாள் விழா முடிந்தவுடன் 5 பேரும் காரில் திரும்பினர். பொல்லிகாளிபாளையம் அருகே வந்த கார் வேகமாக வந்ததில் கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்று கொண்டிருந்த இரு சக்கரவாகனத்தின் மீது மோதியது. விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த திருப்பூர் புதூர்பிரிவு பகுதியை சேர்ந்த சாமிநாதன்,அவரது மனைவி ரத்தினம் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதில் காரில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் படுகாயமடைந்தனர். அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக படுகாயமடைந்த மாணவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் சுபாஷ் என்ற மாணவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயமடைந்த 4 மாணவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Views: - 16

0

0