கொரோனா போல குடியுரிமை..! பிரபல பேச்சாளரின் சர்ச்சை பேச்சு..!!

15 February 2020, 7:28 am
Tiruppur Nanjil - updatenews360
Quick Share

திருப்பூர் : சீனாவில் கொரோனா வைரசால் அச்சப்படுவதை போல இந்தியாவில் குடியுரிமை சட்டத்திருத்தம் மூலம் மக்களை அச்சுறுத்தி வருவதாக இலக்கிய பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

திருப்பூரில் மஸ்ஜித் சுன்னத் வல் ஜமாஅத் சார்பில் புஷ்பா நகர் பகுதியில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது .

இதில் இலக்கிய பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு, சீனாவில் கொரோனா வைரஸ் எப்படி மக்களை அச்சுறுத்தி வருகிறதோ அதுபோல இந்தியாவில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா என்னும் பெயரால் பாஜக அரசு மக்களை அச்சுறுத்தி வருவதாகவும் இந்த சட்டத்தால் தான் டெல்லியை பாஜக கோட்டை விட்டது .

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது எனவும் கூறினார்.