‘அப்படித்தான்… எங்க வேணாலும் போ’.. கிழிந்த நோட்டை கொடுத்து விட்டு பயணியை மிரட்டிய நடத்துநர்.. அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
1 March 2023, 4:59 pm

திருவள்ளூர் ; திருத்தணியிலிருந்து சித்தூர் சென்ற அரசு பேருந்தில் பயணியிடம் கொடுத்த மீதி பணத்தில் பத்து ரூபாய் கிழிந்த நோட்டை மாற்றி தர கேட்டதற்கு தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்ற நடத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து சித்தூர் நோக்கி அரசு பேருந்து தடம் எண் 164ஏ என்ற அரசு பேருந்து இன்று புறப்பட்டது. இதில் பயணி ஒருவர் கேஜி கண்டிகை பகுதியில் ஏறி, சோளிங்கர் வரை செல்ல வேண்டும் என்று இருபது ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளார்.

அதற்கு மீதி கிழிந்து போன பத்து ரூபாய் நோட்டை திருப்பி கொடுத்த கண்டக்டர் தனஞ்செழியன் (62788) என்பவர் கொடுத்துள்ளார். இதற்கு பதிலாக வேறு நோட்டை பயணி கேட்டதற்கு, இதைத்தான் தர முடியும் என்றும், மீறி கேட்டதற்கு தகாத வார்த்தைகளால் பேசி தாக்கவும் முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணி செய்வதறியாது தவித்தார்.

இந்நிலையில், தான் ஒரு திமுக பிரமுகர் என்றும், திமுகவின் தொழிற்சங்கமான தொ.மு.ச. வில் நிர்வாகியாக இருப்பதால் என்னைப் பற்றி யாரிடம் புகார் கொடுத்தாலும் ஒன்னும் செய்ய முடியாது எனவும் பேசியுள்ளார்.

இதனிடையே, பயணியை தகாத வார்த்தைகளால் பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!