கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவில் பக்தர்களை நெகிழ வைத்த இஸ்லாமியர்கள் : கவனத்தை பெற்ற வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
1 March 2023, 8:58 pm
Koniamman - Updatenews360
Quick Share

கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மனின் திருத்தேர் உலா தேர் முட்டியில் பகுதியில் இருந்து தொடங்கி வீதி உலா வந்து மீண்டும் தேர்முட்டி வந்தடைந்தது.

கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் திரு தேரோட்ட விழா பிரசித்தி பெற்றது. இந்த திரு தேரோட்ட விழாவை காண பக்தர்கள் ஆயிரக்கணக்கானர் கோவை நகரம் உட்பட மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து அம்மனை தரிசிக்கின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இன்று மதியம் 2:45 மணி அளவில் கோனியம்மன் கோவில் தேரோட்டம் தொடங்கியது. தேர் முட்டி பகுதியில் தொடங்கிய திருத்தேர் வீதி உலா ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி என வந்து மீண்டும் தேர் முட்டி பகுதிக்கு சென்றடைந்தது.

இந்த திருத்தேர் உலாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அனைவரும் தேருக்கு முன்னும் பின்னும் உலாவாக வந்தனர்.

தேர் ஊர்வலமாக வந்த போது செண்டை மேளங்கள் முழங்க இளைஞர்கள் உற்சாகமாக நடனமாடினர். மேலும் பக்தர்கள் தேர் மீது உப்பு வீசினர். இவ்வாறு செய்தால் வேண்டிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். இப்படி திருத்தேர் வீதி உலா ஓம் சக்தி பராசக்தி என்ற முழக்கங்களுடன் நடைபெற்றது.

இதற்கு முன்னர் தேர் வீதி உலா வரும்பொழுது ஒப்பணக்கார வீதி பகுதியில் உள்ள மசூதி முன்பு இருக்கும் இஸ்லாமியர்கள் பக்தர்களுக்கு தண்ணீர் கேன் வழங்கினர். கிட்டத்தட்ட பத்தாயிரம் கேன்கள் வழங்கப்பட்டுள்ளது.

Views: - 359

0

0