சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ரஜினிக்கு அழைப்பு விடுத்த பாஜக தலைவர் !!

1 September 2020, 12:39 pm
Cbe BJP Leader - Updatenews360
Quick Share

கோவை : அடுத்த வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் பாஜகவினர் உறுப்பினர்களாக இருப்பார் என பாஜக மாநிலத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் பா.ஜ.க மாநில தலைவர் முருகன், துணை தலைவர்கள் வானதி சீனிவாசன், கனகசபாபதி மற்றும் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மாநில தலைவர் முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :

பிரணாப் முகர்ஜி அவர்களின் அரசியல் சிந்தனை, பொருளாதார நடவடிக்கைகள் நாட்டில் சிறப்பாக இருந்தது. இளைஞர்கள் பாஜக.,வை நோக்கி வருகின்றனர். மத்திய அரசால் தமிழகம் அதிகமான பொருளாதார பயனை அடைந்து வருகிறது.

அடுத்து வரும் சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள். வருகின்ற தேர்தலில் பாஜக தனித்தே போட்டியிட்டாலும் தமிழகத்தில் 60 தொகுதிகளில் வெற்றி பெரும். ஊரடங்கு காலத்தில் நிகழ்ச்சி நடத்தியதாக பாஜக நிர்வாகிகள் மீது மட்டும் வழக்கு போடப்பட்டுள்ளது.

அப்படி பார்த்தால் அனைத்து கட்சி நிர்வாகிகள் மீதும் வழக்கு பதிந்திருக்க வேண்டும். ரஜினி தேசியவாதி, ஆன்மீகவாதி அவர் வருகின்ற தேர்தலில் களம் கண்டால் சிறப்பாக இருக்கும். எச்.ராஜா கூறியதைப்போல தமிழக அமைச்சர்கள் பேச்சு கூட்டணியை முறிக்கும் விதத்தில் இருக்க கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

Views: - 6

0

0