சென்னையில் மூவர்ண கொடியை ஏற்றி மரியாதை செலுத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!

15 August 2020, 9:45 am
Quick Share

சென்னை: சென்னையில் மூவர்ண கொடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார்.

நாட்டின் 74வது சுதந்திர தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக அரசின் சார்பில் சென்னை கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

நிகழ்ச்சியில் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை காவல்துறையினர் அழைத்து வந்தனர்.

பின்னர் கோட்டை கொத்தளம் முன்பு அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடை அருகே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 8.33 மணிக்கு வந்தார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து தலைமைச் செயலாளர் சண்முகம் வரவேற்றார்.

மரபுப்படி பல்வேறு துறைகளின் அதிகாரிகளை அவர் முதலமைச்சருக்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொண்டார்.

பின்னர் திறந்த ஜீப்பில் ஏறிச் சென்று, போலீஸ் அணிவகுப்பை அவர்  பார்வையிட்டார். தொடர்ந்து 8.45 மணிக்கு கோட்டை கொத்தளத்துக்கு வந்து மூவர்ண கொடியை அவர் ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார். மூவர்ண பலூன்கள் பறக்க, தயாராக இருந்த போலீஸ் இசை வாத்தியக் குழுவினர் தேசிய கீதத்தை இசைத்தனர்.

Views: - 31

0

0