பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு.!!

30 August 2020, 5:44 pm
Papanasam Dam- Updatenews360
Quick Share

பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து நீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக தமிழகத்தில் உள்ள நீர் நிரலைகளின் நீர் மட்டம் மெல்ல மெல்லஅதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பாசன வசதி மற்றும் குடிநீர் தேவைக்காக பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் இருந்த நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாமிரபரணி ஆற்றின் 11 கால்வாய்களில் வாழைப் பயிர்களை காக்கவும், குடிநீர் தேவைக்காகவும் செப்டம்பர் 1 முதல் 15ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு நீர் திறக்க உத்தரவிட்டுள்ளார்.

வினாடிக்கு 1400 கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி, கார்ப் பருவ நெற்பயிர்களை காக்க தெற்கு வடக்கு கோடை மேலழகியான் கால்வாய்கள், நதியுண்ணிக் கால்வாய், கன்னடியன் கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களில் செப்டம்பர் 16ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை 800 கனஅடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளார்.

Views: - 0

0

0