பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திய முதலமைச்சர் பழனிசாமி : பின்னணியில் நெகிழ்ச்சி காரணம்!!

20 January 2021, 7:17 pm
Cm Stop campaign- Updatenews360
Quick Share

காஞ்சிபுரம் : சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த முதலமைச்சர் பழனிசாமி 5 நிமிடம் பிரச்சாரத்தை நிறுத்திய செயல் மக்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் பழனிசாமி இன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் முதற்கட்டமாக பிரச்சாரத்தை துவங்கினார்.

CM Palanisamy visits Arignar anna memorial in Kanchipuram

இதையடுத்து காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவகத்திற்கு சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின், நினைவகத்தில் உள்ள அண்ணாவின் வாழ்க்கை வரலாறு குறித்த தொகுப்புகள் அடங்கிய புகைப்படங்களை பார்வையிட்டார்.

இந்த நிலையில் சரியாக நண்பகல் நேரத்தில் காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்ட போது, சரியாக ஒரு மணிளவில் இஸ்லாமிய மக்கள் தர்காவில் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.

CM Palanisamy visits Arignar anna memorial in Kanchipuram

அப்போது பிரச்சாரம் செய்து கொண்டிருந்த முதலமைச்சர் திடீரென தனது பிரச்சாரத்தை நிறுத்தினார், பின்னர் தொழுகை முடிந்த பின் தனது பிரச்சாரத்தை துவக்கினார். இதைக்கண்ட பொதுமக்கள் முதலமைச்சரை வெகுவாக பாராட்டி ஆரவாரம் செய்தனர்.

Views: - 12

0

0