திருவள்ளுவர் பல்கலைக்கு கூடுதல் கட்டிடம் : முதலமைச்சர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்!!

By: Udayachandran
5 October 2020, 1:43 pm
University Building - updatenews360
Quick Share

வேலூர் : திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கான பல்வேறு பாடப்பிரிவுகளுக்கான கட்டிடம் மற்றும் மாணவ,மாணவியர் தங்கும் விடுதிகள் உட்பட ரூ.25 .25 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்கள் கட்ட காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

வேலூர் மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் இயற்பியல், வணிகவியல், கணினி உள்ளிட்டவைகளுக்கான அறைகள் மற்றும் மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிகள் மற்றும் மாதனூர் அரசு கட்டிடம் ரூ.25. 25 கோடி மதிப்பீட்டில் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாலை காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு கட்ட்டங்களுக்கான அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம்,மற்றும் திருவள்ளூவர் பல்கலைகழக துணைவேந்தர் பதிவாளர் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.

Views: - 60

0

0