தமிழகத்தில் 4வது நாளாக அதிர்ச்சி தரும் கொரோனா பலி…! ஒரேநாளில் 110 பேர் உயிரிழப்பு

6 August 2020, 9:05 pm
corona Cbe -Updatnews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் 4வது நாளாக கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா தொற்று விவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் 5684 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி உள்ளது.

இதன்மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,79,144ஆக உயர்ந்து இருக்கிறது. பாதிக்கப்பட்ட 5684 பேரில் 1091 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். ஆகையால் சென்னை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 106,096 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவுக்கு 110 பேர் பலியாகிவிட்டனர். இதையடுத்து ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 4571ஆக உள்ளது. இது தவிர இன்று 6272 பேர் குணமாகி உள்ளனர்.

இதன் மூலம் குணமானோர் எண்ணிக்கை 221,087 ஆக அதிகரித்து உள்ளது. இன்று 67,153 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக கொரோனா சோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,20,714 ஆக உள்ளது.