முதலமைச்சர் வழங்கியது தரமில்லாத தையல் மெஷின்கள்.. அரசு நலத்திட்டம் வழங்குவதில் சாதி பாரபட்சம்… அதிகாரிகளை முற்றுகையிட்ட பெண்கள் புகார்…!!

Author: Babu Lakshmanan
9 July 2022, 5:56 pm

கரூரில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தரமற்ற இலவச தையல் இயந்திரங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டதாக கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலையில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஏற்கனவே விண்ணப்பம் செய்திருந்த பயனாளிகள் 60 பேருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.

கடந்த 2ம் தேதி அன்று கரூருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க வந்த போது கொடுக்கப்பட்ட இந்த தையல் இயந்திரங்களை பெற்ற பயனாளிகள், தங்களுக்கு தரமற்ற தையல் இயந்திரங்கள் கொடுத்ததாகக் கூறி, நேற்று முன்தினம் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் அருகிலேயே அமைந்துள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதியில் பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட தையல் இயந்திரங்கள், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட இயந்திரங்களை விட கூடுதல் தரமானதாக கொடுக்கப்படுவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கியதில் பாரபட்சம் காட்டுவதாக கூறி, புகார் தெரிவித்து கோரிக்கை மனு வழங்கினர். புகார் தெரிவித்த பொதுமக்கள் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட இயந்திரங்களை திருப்பி அளிப்பதாகவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டபோது இரண்டுமே வேறு வேறு துறை என்பதால், தேர்வு செய்யப்பட்ட அந்தந்த பயனாளிகளுக்கு அவர்களுக்கு உரிய பொருட்கள் முறையாக வழங்கப்பட்டதாக தெரிவித்தனர்.

மேலும், தற்போது திராவிட மாடல் ஆட்சியில் அதுவும் முதல்வர் ஆணையால் கரூரில் வழங்கப்பட்ட இந்த தையல் இயந்திரங்களில் கோளாறு மற்றும் பாரபட்சம் காட்டுவதாகவும், இதற்கு பணத்தை பெற்றுக் கொண்டு கூட தரமான பொருட்களை தரலாம் என்றும் பயனாளிகள் முனுமுனுத்து சென்றனர்.

  • shankar have no other films than indian 3 movie ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே