பேருந்து மீது அதிபயங்கரமாக கார் மோதி விபத்து.. சம்பவ இடத்திலேயே தம்பதி உடல் நசுங்கி பலி… ஆதரவற்றுப் போன இரு குழந்தைகள்..!!

Author: Babu Lakshmanan
9 July 2022, 6:16 pm
Quick Share

விருதுநகர் கணபதி மில் பிரிவில் தனியார் பேருந்து மீது பின்புறம் கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பழைய பெருங்களத்தூரில் வசித்து வருபவர் மனோஜ் (37). இவரது மனைவி நிதர்ஷா (32). இவர்களுக்கு பிரணவ் ஆதித்யா (8), மற்றும் 9 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் நான்கு நபர் சென்னையில் இருந்து காரில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இவர்கள் பயணித்த கார் மதுரை – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் கணபதி மில் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது, சாத்தூரில் இருந்து விருதுநகர் நோக்கி வந்து தனியார் பேருந்து நெடுஞ்சாலையை கடக்க முயற்சி செய்தது.

அப்பொழுது மனோஜ் ஓட்டி வந்த கார் பேருந்தின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்தில் மனோஜ் மற்றும் அவரது மனைவி நிதர்ஷா உயிர் இழந்தனர்.

மேலும் இவர்கள் குழந்தைகள் இருவரும் படுக்காயத்துடன் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பஜார் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 188

0

0