திருவனந்தபுரம் நவராத்திரி : பல்லக்கில் சென்ற சாமி சிலைகளுக்கு தமிழக கேரள எல்லையில் போலீசார் மரியாதை!!

By: Udayachandran
15 October 2020, 11:41 am
Kanyakumari Lord - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : நவராத்திரி திருவிழாவிற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சென்ற சாமி சிலைகளுக்கு தமிழக கேரள எல்லையில் இரு மாநில போலீஸார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதையை செலுத்தி வரவேற்பு அளித்தனர்.

கேரளாவில் நடைபெறும் நவராத்திரி விழாவில் கலந்து கொள்ள பவனியாக புறப்பட்ட கன்னியாகுரி மாவட்டம் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை ,தேவாரகட்டு சரஸ்வதி , குமார கோயில் முருகன் ஆகிய சாமி சிலைகள் நேற்று பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து பல்லக்குகளில் பவனியாக வந்து குழித்துறை மஹாதேவர் கோயிலில் இரவு பக்தர்கள் ஓய்வுக்கு பிறகு இன்று அதிகாலை பவனி புறப்பட்டது.

தமிழக கேரள எல்லையில் இரு மாநில போலீஸார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதையை செலுத்தி வரவேற்பு அளித்தனர். அதை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்திரிநாத் நாராயணன் கேரள மாநிலம் திருவனந்தபுரம் கண்காணிப்பாளர் அசோக்குமாரிடம் பவனி பாதுகாப்புகளை ஒப்படைத்தார்.

ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரவேற்பு அளிப்பது பாரம்பரிய ரீதியாக கடைபிடிக்கபட்டு வருகிறது இந்த ஆண்டு கொரானா கட்டுப்பாடுகள் காரணத்தால் இந்து அறநிலையத்துறை பக்தர்கள் வரவேற்பு அளிக்க தடை விதிக்கப்பட்ட காரணத்தால் பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்

Views: - 42

0

0