அரசியல் காரணத்திற்காக திமுக கிராம சபையை நடத்துகிறது : அமைச்சர் உதயகுமார் தாக்கு!!

Author: Udayachandran
2 October 2020, 12:21 pm
RB udayakumar- updatenews360
Quick Share

மதுரை : ஒட்டு மொத்த மக்களுக்காகாக கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதே தவிர திமுக விவாதிக்கும் என்பதால் அல்ல என்று அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார்.

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை மேலமாசி வீதி காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் உள்ள காந்தி சிலைக்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செய்து கதர் விற்பனையை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன், ஆட்சியர் டி.ஜி.வினய் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “காந்தியடிகளின் வாழ்க்கை குறிப்பில் மதுரைக்கு மிக முக்கிய பங்கு உள்ளது, காந்தியடிகள் தமிழகத்திற்கு 20 முறை வந்துள்ளார்கள், காந்தியடிகள் மதுரையில் தான் முதல் முதலில் அரை ஆடை அணிந்தார்கள், காந்தியடிகள் சுதந்திர போரட்டத்திற்கு வித்திட்டவர், எடுத்து கொண்ட கொள்கையில் மாறுபடாமல் பணியாற்றியவர் காந்தியடிகள் எனக் கூறினார்.

கிராம சபை கூட்டம் என்பது மிக முக்கியமானது. தமிழக அரசு மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும், கள நிலவரத்தால் கிராம சபை கூட்டம் தற்காலிகமாக ரத்து, வேளாண் சட்டம் குறித்து கிராம சபை கூட்டத்தில் திமுக விவாதிக்கும் என்பதால் ரத்து செய்யவில்லை, அரசியல் காரணத்திற்க்காக கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்து உள்ளது.

மக்களை காக்கும் பொறுப்பும், கடமையும் அரசுக்கு உள்ளது, கருத்து சுதந்திரம் உள்ளதால் பல பேர் வீட்டில் உட்கார்ந்து கொண்டு கருத்து சொல்லி வருகிறார்கள், ஒட்டுமொத்த மக்களுக்காக கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் ராகுல் காந்தி உ.பி யில் அனுமதிக்கவில்லை, தலைவர் அனைவருக்கும் முன் மாதிரியாக இருக்க வேண்டும். களத்தில் நிற்க்கும் கட்சி அதிமுக மட்டுமே, ஜல்லிக்கட்டு மீட்பு, வர்தா புயல், கிருஷ்ணா நதி நீர் ஆகிய விவகாரத்தில் வெற்றி கண்டவர் ஒ.பி.எஸ்.

கொரோனாவை தடுக்கும் நடவடிக்கையில் முதல்வர் இந்தியாவுக்கு முன் மாதிரியாக பணியாற்றி வருகிறார். முதல்வரை பிரதமரே பாராட்டி உள்ளார். அதிமுகவில் மட்டுமே வலிமை மிக்க தலைவர்களும், திட்டங்களும் உள்ளது. திமுக காலி பானையாக உள்ளது, ஆரோக்கியமான கருத்து ஒற்றுமை ஏற்பட்டு வியூகத்தின் அடிப்படையில் மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

மக்களின் எதிர்பார்ப்பு உள்ளதால் அதிமுக முதல்வர் வேட்பாளர் 7 ஆம் தேதி அறிவிக்க உள்ளோம், அதிமுகவில் சர்ச்சையோ, சண்டையோ, குழப்பமோ இல்லை, இ.பி.எஸ் – ஒ.பி.எஸ் இருவரும் நாட்டுக்காக உழைத்து வருகிறார்கள்.

7 ஆம் தேதி அறிவிப்புக்கு நாட்டு மக்களே காத்து கொண்டு உள்ளனர், அதிமுகவில் தனி மனிதர்கள் சொல்லுவதற்கு முக்கியத்துவம் கிடையாது, தலைமையின் தீர்ப்புக்கு மட்டுமே 1 1/2 கோடி தொண்டர்கள் கட்டுபாடுவர்கள்” என கூறினார்.

Views: - 43

0

0