ஊரடங்கு நேரத்தில் ஏழைகளுக்கு உயிர் கொடுத்த அம்மா உணவகங்கள்..! (வீடியோ)

26 March 2020, 7:31 pm
Cbe Amma Foods - Updatenews360
Quick Share

கோவை: கொரோனாவால் அசாதாரண சூழல் நிலவி வரும் வேளையில் ஏழைகளுக்கு அம்மா உணவகம் உதவிக்கரம் நீட்டி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், இந்தியாவிலும் தனது கோர முகாதத்தை காட்டி வருகிறது இந்த கொடிய வைரஸ். இதன் காரணமாக நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14 ம் தேதி வரை முடக்கப்பட்டுள்ளது.

விமானம், ரயில் மற்றும் பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. வணிக வளாகங்கள் தொடங்கி உணவகங்கள், டீக்கடை வரை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. நாடே ஒட்டுமொத்தமாக முடங்கியுள்ள இந்த சூழலில் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் கிடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இருக்கும் ஒரு சில மளிகை கடைகளில் மக்கள் மக்கள் கூட்டம் அலை மோதி வருகிறது. இந்த சூழலில், உணவகங்களை நம்பி வெளியூர்களுக்கு வேலைக்கு சென்றவர்கள், மற்றும் சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்ற ஏழை மக்கள் கடுமையான அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பல பல மாநிலங்களில் ஆதரவில்லாத மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். இந்த அவலத்தில் இருந்து தமிழகம் தப்பி பிழைத்துள்ளது. காரணம் அம்மா உணவகம் தான். உண்டி பிழைத்தோர்க்கு உயிர் பிழைத்தோரே என்று கூற்றும் உண்டு. இங்கே உணவில்லாமல் தவித்து வருபவர்களுக்கு வாழை இலையிலேயே வரவேற்பு தெரிவித்து மூன்று வேலை சாப்பாடு போடுகிறது அம்மா உணவகம்.

முன்னாள் முதலமைசசர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகங்கள் தான் இந்த இக்கட்டான சூழலில் ஆதரவில்லாத மக்களுக்கும், வெளியூர் வாசிகளுக்கும் ஆதவரவுக்காரம் நீட்டி வருகிறது. வைரஸ் தொற்றால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டாலும் அம்மா உணவகம் வழக்கம் போல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இட்லி, உப்புமா சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம் இந்த உணவகங்களில் கிடைப்பதால் இந்த நேரத்தில் ஏழை மக்கள் மட்டுமல்லாது, ஐடி நிறுவன ஊழியர்களும் இந்த உணவாகத்தை நாடி வருவதை பார்க்க முடிகிறது.

ஒரு இட்லி ஒரு ரூபாய், தயிர் சாதம் 3 ரூபாய், சாம்பார் சாதம் 5 ரூபாய் என்று சாமானிய மக்களுக்கு ஏற்ற விலையில் உணவுகள் கிடைப்பதால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். அடுத்துவரும் 3 வாரங்களுக்கு இந்த உணவகம் தான் தாய்வீடு என்று கூறும் பொதுமக்கள் உணவுகளின் தரத்தை இன்னும் அதிகரிக்க அரசு ஆவண செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பதே மறுக்கமுடியா உண்மை. என்னதான் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்தாலும், கையில் காசு இருக்க வேண்டும் அல்லவா. வறுமையினால் வயிற்றில் ஈரத் துணி கட்டி பசியாறும் ஏழைகளுக்கு தற்போது அம்மா உணவகம் வழங்கும் சோறு, தமிழக ஏழைகளின் வயிற்றை கழுவுகிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.