தமிழகத்தில் செப்-7 முதல் சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வேயுடன் அரசு ஆலோசனை..!

2 September 2020, 7:00 pm
Quick Share

தமிழகத்தில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு மழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையில் மாநிலவாரியாக முதலமைச்சர்கள் மற்றும் மத்திய சுகாதாரத்துறை ஆகியோரிடம் பிரமதர் தலைமையிலான குழு ஆலோசனை மேற்கொண்டு பொதுமுடக்கத்தில் படிப்படியாக தளர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த 31ஆம் தேதி முதல் 3.0 பொது முடக்கம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து முன்னதாக, அதை நீட்டிப்பது குறித்து தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம் அன்லாக் 4.0 ஊரடங்கு தளர்வுக்கான புதிய வழிகாட்டுதல்களையும் வெளியிட்டது.

அதன் அடிப்படையில் தமிழக அரசு பொது முடக்கத்தில் தற்போது பல்வேறு கட்ட தளர்வுகளை படிப்படியாக ஏற்படுத்தி, அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. 

அந்த வகையில், செப்டம்பர் 7-ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 4.0 தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்க தெற்கு ரயில்வேவிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Views: - 0

0

0