விவசாயிகளுக்கு உடனே இதை செய்யுங்க : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு!!
13 January 2021, 9:21 pmமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மழையால் வயல்கள் கடுமையாக பாதிப்பட்டது.
இதையடுத்து பாதிப்பட்ட வயல்களில் போர்க்கால நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட முதலமைச்சர் பழனிசாமி கணக்கெடுப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இந்த நிலையில் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.கனமழையால் பாதிப்பட்டுள்ள விளைநிலங்களுக்கு உரிய இழப்பீடு உடனே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது விவசாயிகளுக்கு ஆறுதல் அளித்துள்ளது.