மறுபடியும் முதல்ல இருந்தா… இன்றைய பெட்ரோல், டீசல் விலை பற்றி தெரியுமா..?

Author: Babu Lakshmanan
27 May 2022, 8:16 am

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன தெரியுமா..?

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

இதற்கிடையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சற்று குறைத்தது. இந்த விலைக்குறைப்பு அமலுக்கு வந்தது முதல் பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றமில்லை. இதனால், சென்னையில் கடந்த 137 நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40 ஆகவும், டீசல் ரூ.91.43 ஆகவும் விற்கப்பட்டது.

ஆனால், கடந்த மார்ச் 22ம் தேதி முதல் மெல்ல மெல்ல மீண்டும் விலை உயர்ந்து காணப்பட்டது. சென்னையில் நேற்று எந்தவித மாற்றமுமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய் மற்றும் ஒரு லிட்டர் டீசல் 100.94 ரூபாய்க்கும் விற்பனையாகின. இதன் மூலம், 45வது நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீர் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தார்.

அதனை தொடர்ந்து சென்னையில் மே 23ம் தேதியன்று பெட்ரோல் ரூ.8.22 காசு குறைந்து 102.63 ரூபாய்க்கும், டீசல் ரூ.6.70 காசு குறைந்து 94.24 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது.

இன்று 6வது நாளாக பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்பனையாயின.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?