பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு… ரூ.100ஐ நெருங்கிய டீசல் விலை… வாடகை வாகன ஓட்டுநர்கள் கலக்கம்..!!

Author: Babu Lakshmanan
20 October 2021, 8:20 am
Quick Share

சென்னை: பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் உயர்ந்திருப்பது வாகன ஓட்டிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

இதனடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர். கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தினசரி உயர்ந்து வந்த நிலையில், இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் உயர்ந்துள்ளது.

அதன்படி, பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.103.31 ஆகவும், டீசல் விலை 34 காசுகள் உயர்ந்து ரூ. 99.26-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Views: - 165

0

0