16-வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை… இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.!!

7 October 2020, 7:59 am
Petrol Diesel - Updatenews360
Quick Share

சென்னை:பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாகன ஒட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று டீசல் லிட்டருக்கு 15 காசுகள் குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

பெட்ரோல் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய #பெட்ரோல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.84.14 ஆகவும், #டீசல் விலை லிட்டருக்கு 15 காசுகள் குறைந்து ரூ.75.95 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை 16 வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை. டீசல் விலையிலும் மாற்றம் செய்யப்படவில்லை.இந்த விலை நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் மதிப்புக் கூட்டு வரி உயர்த்தப்பட்டுள்ளதால், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக மாஸ்க் அணிந்து வராதவர்களுக்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 38

0

0