தொடர்ந்து 6வது நாளாக நடைபெற்ற சம்பவம்…! தமிழகத்தில் கொரோனா தந்த அதிர்ச்சி

8 August 2020, 7:31 pm
corona virus new 8- updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் 6வது நாளாக கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை சதத்தை கடந்திருப்பது, அதிர்ச்சியை தருகிறது.

தமிழகத்தில் இன்னமும் கொரோனா காலம் முடியவில்லை. நாள்தோறும் கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கிறது. இன்றும் வழக்கம் போல் அதிகமான கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. அதன் முழு விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இன்று மட்டும் 5883 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. மற்ற மாவட்டங்களில் 4897 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பாதிப்பு அதிகம் என்பது போல, பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகமாகி கொண்டே போகிறது. இன்று மட்டும் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4800ஐ தாண்டியது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 118 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதாவது 6 நாட்களாக தமிழகத்தில் கொரோனா பலி 100ஐ கடந்து இருக்கிறது. இதன் மூலம் ஒட்டு மொத்தமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,808 ஆக அதிகரித்துள்ளது. 81 பேர் அரசு மருத்துவமனையிலும், 37 பேர் தனியார் மருத்துவமனையிலும் பலியாகி உள்ளனர். இன்று மட்டும் 5,043 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர்.

Views: - 10

0

0