கோவையில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்..!

Author: Udayaraman
1 August 2021, 8:48 pm
Malaysia Corona - Updatenews360
Quick Share

கோவை: கோவை மாவட்டத்தில் இன்றைய கொரோனா தொற்று பாதிப்பு நிலவரத்தை சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி , நேற்று 243 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், இன்று ஒரே நாளில் 230 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 208 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்னும் 1,961 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவையில் இதுவரை 2,29,589 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதுவரை 2,25,444 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,990 பேருக்கு ஒரு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 25,61,587 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 136

0

1