தொற்று பாதிப்பில் போட்டி போடும் சென்னை, கோவை : தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 November 2021, 7:58 pm
TN Corona -Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று சற்று குறைந்துள்ளது.

கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், இன்று 730 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,26,197ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக, இன்று கோவையில் 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, சென்னையில் 105 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,472 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 767 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 81 ஆயிரத்து 434ஆக அதிகரித்துள்ளது.

Views: - 161

0

0