நாளை முழு ஊரடங்கு… இன்றே சந்தைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்… கொரோனா தொற்று பரவும் அபாயம்
Author: Babu Lakshmanan8 January 2022, 2:51 pm
கரூர் : நாளை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், கரூர் வாரச்சந்தையில் காய்கறி வாங்க குவிந்த மக்களால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழக அளவில் கொரோனா மூன்றாம் அலையாக உருமாறி ஓமிக்ரான் என்கின்ற வைரஸ் தாக்கம் கடுமையாக தாக்கி வருகிறது. இதனால், நாளுக்கு நாள் தொற்று பாதிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், முழு ஊரடங்கு உத்தரவு நாளை அமல்படுத்த உள்ளது. நாளை ஊரடங்கு என்பதால், பொதுமக்கள் இன்றே காய்கறி, பழச்சந்தைகளில் குவிந்து வருகின்றனர். இதனால், கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், கரூர் கச்சேரி பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் வாரச்சந்தையில் அதிக அளவில் பொது மக்கள் காய்கறி வாங்க குவிந்ததால் கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் முகக் கவசம் அணியாமல் காய்கறிகளை வாங்கிச் சென்று விடுகின்றனர். இதற்கு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையாக உள்ளது. மேலும் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
0
0