சுற்றுலா வந்த வேன் தலைகீழ் கவிழ்ந்து விபத்து: 13 பேர் படுகாயம்

Author: kavin kumar
8 January 2022, 5:42 pm
Quick Share

சேலம்: குப்பனூர் மலைப்பாதையில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 13 பேர் வேன் மூலம் நேற்று ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்துள்ளனர். பின்னர் இன்று பிற்பகல் ஏற்காட்டில் இருந்து குப்பனூர் மலைப்பாதை வழியாக சொந்த ஊர் திரும்பிய போது கரியராமர் கோயில் அருகே வேன் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 13 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஏற்காடு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக வாழவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனைவரையும் அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Views: - 324

0

0