ஆர்பரித்து கொட்டினாலும் கலையிழந்த திற்பரப்பு : ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை!!

20 April 2021, 6:52 pm
Thirparappu Falls -Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : ஊரடங்கு காரணமாக சுற்றுலா தலமான திற்பரப்பு அருவி நுழைவு வாயில் பூட்டபட்டு சுற்றுலாபயணிகளை அனுமதிக்கப்படவில்லை.

ஊரடங்கு தளர்வு நேரத்தில் கோடை வெயில் சுட்டெரித்த காரணத்தால் திற்பரப்பு அருவியில் குறைந்த அளவே தண்ணீர் காணப்பட்டது. தற்போது மழை பெய்து வருவதால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சீசன் துவங்கியுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் மீண்டும் அருவியில் குளிக்க தடை காரணத்தால் இந்த பகுதியை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் அருவியின் நுழைவு வாயில் பார்கிங்,படகுசவாரி உட்பட ஒப்பந்ததாரர்கள் அவர்களை நம்பி உள்ள தொழிலாளர்கள் பெரும்பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

ஊரடங்க விதிக்கப்பட்டுள்ளதால் மாவட்டம் முழுக்க உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு காணப்படுகிறது. இதனால் சிறு வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர்.

Views: - 47

0

0