திம்பத்தில் திரும்ப முடியாமல் தொடரும் அவலம் : பழுதாகி நின்ற லாரியால் ஸ்தம்பித்த போக்குவரத்து!!!
Author: Udayachandran RadhaKrishnan24 September 2021, 3:41 pm
ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 27 வது கொண்டை ஊசி வளைவில் லாரி பழுதடைந்து நின்றதால் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்கள் இடையே சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. திண்டுக்கல் மைசூர் தேசிய நெடுஞ்சாலை என்பதால் இம்மலைப் பாதை வழியாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 24 மணி நேரமும் சரக்கு மற்றும் வாகன போக்குவரத்து நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து மைசூருக்கு சக்கரை பாரம் ஏற்றி வந்த லாரி திம்பம் மலைப்பாதை வழியாக சென்றுகொண்டிருந்தது அப்போது திம்பம் மலைப்பாதை 27 வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்ப முற்பட்டபோது எதிர்பாராதவிதமாக லாரி பழுதடைந்து நின்றது.
இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்து வந்த போக்குவரத்து காவல்துறையினர் வாகனங்களை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதடைந்து நின்றதால் தமிழகம் மற்றும் கர்நாடகம் ஆகிய இடையே சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
0
0