மீன் பிடிக்கச் சென்ற போது விபரீதம் : நீரில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலியான பரிதாபம்!!
Author: kavin kumar16 January 2022, 1:44 pm
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மீன்பிடிக்கச் சென்ற இரு பள்ளி மாணவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே உள்ள ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் வீர ஹரிஷ் குமார் (வயது 15), இவர் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த வில்லியம் மகன் எழில் ரிச்சர்ட் (வயது 15) இவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறை தினத்தை ஒட்டி ரெட்டியபட்டி அருகே உள்ள குளத்தில் இருவரும் மீன்பிடிக்கச் சென்றனர். இதில் தவறி குளத்தில் விழுந்தனர். இருவருக்கும் நீச்சல் தெரியாத காரணத்தினால் நீரில் மூழ்கி பலியாகினர். பள்ளி மாணவர்கள் மீன்பிடிக்க சென்று குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0
0