புறநகர் ரயிலில் பீக் ஹவரில் ஆண்கள் பயணிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

Author: Babu Lakshmanan
2 September 2021, 8:10 pm
Quick Share

சென்னை : சென்னை புறநகர் ரயில்களில் பீக் ஹவரில் ஆண்கள் பயணிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரயில் பயணங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. அதன்படி, கொரோனா பாதிப்பு ஆரம்பத்தில் குறையத் தொடங்கிய போது, முன்களப் பணியாளர்கள், அரசால் அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய பணிகளில் இருப்பவர்கள் அடையாள அட்டை காண்பித்து பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பொதுமக்கள் பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் மகளிர் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அனைவரும் பயணிக்க அனுமதிக்கப்பட்டிருந்தாலும், “பீக் ஹவர்” எனப்படும் காலை 7 மணி முதல் காலை 9 மணி வரையும் பிற்பகல் 4.30 மணி முதல் மாலை 7 மணி வரையும் ஆண்கள் பயணிக்க தடை இருந்து வந்தது.

இந்த நிலையில், இந்தக் கட்டுப்பாட்டை தெற்கு ரயில்வே நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதாவது, மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் டிக்கெட் வழங்கப்படும் என்றும், கொரோனா தடுப்பூசி 2 தவணை போட்டுக்கொண்ட சான்றிதழ் மற்றும் எதாவது ஒரு அடையாள அட்டையை காண்பித்து அவர்கள் டிக்கெட் வாங்கிக்கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 278

0

0