தடையை மீறி பயணம் : பாதாள சாக்கடை பணியின் போது பள்ளத்தில் சிக்கிய வாகனங்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 January 2022, 11:48 am
Vehicles Struggle - Updatenews360
Quick Share

கோவை : ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதாள சாக்கடை பணியின் போது, காவல்துறையின் தடையை மீறி சென்ற வாகனங்கள் தோண்டப்பட்ட குழியில் மாட்டிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதாள சாக்கடை குழாய் மற்றும் தண்ணீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. எனவே, அந்த பகுதி ஒரு வழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது.

குழாய் பதிக்கும் சாலையில் காவல்துறையினர், அறிவிப்பு பலகை மற்றும் தடுப்புகளை வைத்துள்ளனர். பாதுகாப்பு காவலர்களும் உள்ளனர். இந்நிலையில், காவல்துறையினரின் தடுப்புகளை மீறி அப்பகுதியில், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தி வைத்தனர்.

இந்நிலையில், அப்பகுதியில் பணிகள் முடிவடையாததால், பதிக்கப்பட்ட குழாய்கள் மீது மண் போடப்பட்டு மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், மூடப்பட்ட குழாய்கள் மீது கார்கள் ஏறி நின்றதால், தண்ணீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதுடன், அப்பகுதியில் நின்றிருந்த இரு கார்கள், ஒரு ஆட்டோ குழியில் சிக்கி கொண்டது.

இதையறிந்த வாக ஓட்டிகள், அப்பகுதியில் குழாய் பதிப்பில ஈடுபட்டிருந்த பணியாளர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து ஜேசிபி உதவியுடன் சிக்கிக்கொண்ட வாகனங்களை மீட்டனர். இதற்கிடையே, குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் ஓடியது.

அதை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.காவல்துறையினரின் தடையை மீறி வாகனங்கள் நிறுத்தியதால், வாகனங்கள் சிக்கிக்கொண்டது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 357

0

0