கொரோனா காலத்தில் உயிரிழந்த பத்திரிகையாளர்களுக்கு கோவையில் அஞ்சலி
27 August 2020, 12:20 pmகோவை : கொரோனா பேரிடர் காலத்தில் உயிரிழந்த பத்திரிகையாளர்களுக்கு கோவை மாவட்ட அனைத்து ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 7 ஊடகவியலாளர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர், பலருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது
மேலும் இந்த பேரிடர் காலத்தில் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பத்திரிக்கையாளர் சிலர் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சூழலில், உயிரிழந்த பத்திரிக்கையாளர்களுக்கு கோவை மாவட்ட அனைத்து ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அனைத்து ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். மூத்த பத்திரிக்கையாளர்கள் இரங்கல் உரையை தெரிவித்தனர்.