மனைவி மற்றும் மாமியார் கழுத்தறுத்துக் கொலை: 2 வயது குழந்தையுடன் தலைமறைவான கணவன்

24 September 2020, 11:47 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் மனைவி மற்றும் மாமியார் கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டு தலைமறைவான கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி பெரிய மிளகுபாறை நாயக்கர் தெருவில் வசித்து வருபவர் உலகநாதன். இவர் தனது மனைவி பவித்ரா (35). மாமியார் கலைச்செல்வி (60). மகள் அனுஷ்காவுடன் அங்கு வசித்து வந்தார். இவருக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படுவதன் காரணமாக மருத்துவம் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர் இன்று காலை தனது மாமியார் மற்றும் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, வீட்டை பூட்டி விட்டு தனது 2வயது குழந்தை அனுஷ்காவை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார்.

பெரம்பலூரில் இருந்து உலகநாதன் தாயார் திருச்சியில் தனது மகனுக்கு பல முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் தொலைபேசியை எடுக்காத காரணத்தால், வீட்டிற்கு அருகில் உள்ள உறவினருக்கு அழைத்து விட்டில் இருக்கும் மருமகளை போனில் பேசும் படி கூறுங்கள் என்றார். இதையடுத்து உறவினர் வீட்டிற்கு வந்தபோது அவர்களது வீடு திறக்காததால் அந்த நபர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது உலகநாதனின் மனைவியும், அவரது மாமியாரும் சடலமாக கிடந்துள்ளனர். இதனால் அதிர்ந்து போன அந்த நபர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்
இருவரும் உயிரற்ற சடலமாக கிடந்ததை கண்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில்,உலகநாதன் இருவரையும் கொலை செய்து விட்டு தலைமறைவாக உள்ளது தெரிய வந்தது. இதையடுத்து கொலைக்கான காரணம் குறித்தும், தலைமறைவாக உள்ள உலகநாதனையும் தேடி வருகின்றனர்.