திருச்சி அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் படங்கள் கிழிப்பு… எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒற்றைத் தலைமைக்கு ஆதரவு!!

Author: Babu Lakshmanan
25 June 2022, 11:39 am

திருச்சி : திருச்சி முன்னாள் அமைச்சர் அலுவலகத்தில் இருந்த பேனர்களில் ஓபிஎஸ் படங்கள் கிழிக்கப்பட்ட சம்பவம் அதிமுகவில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது ஒற்றை தலைமை வேண்டும் என்ற பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் காரணமாக, அண்மையில் நடந்த பொதுக்குழுவில் எந்த முடிவும் எடப்படாமல் போனது.

மேலும், பொதுக்குழு கூட்டம் நடைபெறாமல் அடுத்த மாதம் 11ம் தேதி நடைபெறும் என தற்காலிக அவைத் தலைவர் அறிவித்தையடுத்து பொதுக்குழு எந்தவித தீர்மானம் நிறைவேற்றப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தந்த பன்னீர்செல்வம், அந்தக் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்.

இந்நிலையில், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் பரஞ்சோதி அலுவலகத்தில் முன் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டில் இருந்த ஓபிஎஸ் படம் கிழிக்கப்பட்டது. மேலும், அலுவலகத்தின் உள்ளே சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த ஓபிஎஸ் படமும் கிழிக்கப்பட்டு இருந்தது.

திருச்சியை பொருத்தவரை மாவட்ட செயலாளர்கள் மற்றும் பெரும்பாலான அதிமுகவினர் எடப்பாடிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?