திருச்சி ஜல்லிக்கட்டு.. முதலிடம் பிடித்த யோகேஷுக்கு பைக் பரிசு… காளைக்கும் மோட்டார் சைக்கிள்!!

Author: Babu Lakshmanan
15 January 2022, 9:20 pm
Quick Share

திருச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த யோகேஷுக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஸ்ரீநற்கடல்குடி கருப்பணசுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று தமிழர்களின் வீர விளையாட்டான் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசுக்கு வழிகாட்டுதலின்படி தொடங்கியது.

மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் உறுதிமொழி வாசிக்க வாசிக்க மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்து கொண்டனர். தொடர்ந்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடியை அசைத்து போட்டியை துவக்கி வைத்து முதலில் மாடு பிடித்த வீரருக்கு அரை பவுன் தங்க தங்க மோதிரத்தை வழங்கினார்.

ஜல்லிக்கட்டு போட்டியில் 480 காளைகள், 258 மாடுபிடி வீரர்களும் கலந்துகொள்ள கொண்டனர். வீரர்கள் 4 பிரிவுகளாக அனுமதிக்கப்பட்டனர். மாடுபிடி வீரர்களுக்கு திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.

இதேபோல் காளைகளுக்கு கால்நடை மாவட்ட இணை இயக்குனர் எஸ்தர் ஷீலா தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொண்டு உரிய சான்றிதழ்களை வழங்கினார். ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்திற்கு காளையை கொண்டு வந்த ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த மாட்டின் உரிமையாளர் மீனாட்சி சுந்தரத்தின் (30) மீது மாடு பாய்ந்தது இதில் பலத்த காயமடைந்த அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் மாடு பாய்ந்ததில் மாட்டின் உரிமையாளர்கள் கும்பகுடியை பாலசுப்பிரமணியன் (26), கொட்டப்பட்டு மலைக்கோவில் சேர்ந்த வைரமணி (24), கீழ பெருவளநல்லூரை சேர்ந்த வேலு (27) பார்வையாளர்கள் காந்தலூர் சிவானந்தம் (32), பேரூரை சேர்ந்த சின்னா (19),புதுக்கோட்டை குலத்தைச் சேர்ந்த சதீஷ்குமார்(30), ஆலங்குடிப்பட்டி பாஸ்கர் (45), விழா கமிட்டி கர்ணன் (48), அசூர் டேவிட், கந்தர்வகோட்டை பவுன் துரை ஆகியோர் படுகாயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

இதே போல் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு விழா குழு ஒருங்கிணைப்பாளரும், அதிமுக தெற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ராஜா(52), பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்ட அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் காவல் நிலையத்தை சேர்ந்த கலைவாணன்(32) மாடுபிடி வீரர் 2பேர், மாட்டின் உரிமையாளர்கள் 24 மற்றும் பார்வையாளர்கள் 25 விழா கமிட்டியை சேர்ந்த 2 பேர், பாதுகாப்பு பணி ஈடுபட்ட காவல்துறையினர் உட்பட 52 பேர் காயம் அடைந்தனர்.

சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல் பரிசு பைக்கும், இரண்டாவது பரிசு கலர் டிவி, மூன்றாவது பரிசு பிரிஜ் வழங்கப்பட்டது. சிறந்த காளைக்கு முதல்பரிசு பைக், இரண்டாம் பரிசு கலர் டிவி, 3ம் இடம் பிடித்த பிரிட்ஜ் வழங்கப்பட்டது.

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போட்டிகள் கோட்டாட்சியர் தவச்செல்வம், தாசில்தார் செல்வகணேஷ், பிடிஒக்கள் லலிதா, ஜான்கென்னடி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

Views: - 263

0

0