எம்.ஜி.ஆர் சிலையை சுத்தம் செய்த அமைச்சர்! திருச்சியில் பரபரப்பு!!

20 August 2020, 3:07 pm
Minister Clean MGR Statue - Updatenews360
Quick Share

திருச்சி : திருச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி விட்டு காரில் புறப்பட்டு சென்ற அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் எம்ஜிஆர் சிலையை பார்த்ததும் இறங்கி வந்து சுத்தம் செய்து மாலை அணிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி கருமண்டபத்தில் இன்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, காரில் தென்னூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது கார் கோர்ட் அருகே சென்று கொண்டிருந்த போது அங்குள்ள எம்ஜிஆர் சிலையை கண்டவுடன்
உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தச் சொல்லி வண்டியிலிருந்து கீழே இறங்கி தன் கையிலிருந்த துணியால் தானே எம்ஜிஆர் சிலையை சுத்தம் செய்தார்.

பின்னர் ஆளுயர மாலையை எம்ஜிஆர் சிலைக்கு அணிவித்து வணங்கி விட்டுச் சென்றது அந்த பகுதியில் வந்தவர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று அரசு சார்பில் நடந்த நிலையில்லா முக கவசம் வழங்கும் நிகழ்ச்சியை முடித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் தலைவர் எம்.ஜி.ஆரின் கனவுத் திட்டமான திருச்சியை இரண்டாவது தலை நகரமாக மாற்ற வேண்டும் என்ற திட்டத்தை உறுதிப்படுத்தி பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், இன்று எம்ஜிஆரின் சிலையை தானே துடைத்து மரியாதை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 36

0

0