“நான் அப்படி சொல்லல“ : அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் விளக்கம்!!

Author: Udayachandran
3 October 2020, 6:17 pm
Minister Vellamandi Natarajan- updatenews360
Quick Share

திருச்சி : நான் கூறியதை ஊடகங்கள் தவறாத திரித்து சித்தரித்து விட்டனர் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.

திருச்சி இபி சாலையில் முஸ்லிம் மகளிர் சங்க பயனாளிகளுக்கு மேம்பாட்டிற்கான நிதி உதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வரும் திங்கள், செவ்வாய் ,புதன் ஆகிய மூன்று தினங்களும் அனைத்து அமைச்சர்கள் சென்னையில் இருக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டதாக தெரிவித்திருந்தார். அவரின் இந்த பேச்சு ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து தென்னூரில் உள்ள தனது அலுவலகத்தில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதுகுறித்து தன்னிலை விளக்கம் அளித்தார். அதில் முதல்வர் உத்தரவு குறித்து தான் கூறிய கருத்துக்கள் ஊடகங்களில் திரித்து கூறப்பட்டுள்ளது.

இந்த கொரோனா காலத்தில் திங்கள் ,செவ்வாய், புதன் ஆகிய மூன்று தினங்களும் அமைச்சர்கள் சென்னையில் இருந்து பணியாற்ற வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார். அதை தான் நான் குறிப்பிட்டேன்.

ஆனாலும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுவதை ஒட்டி இந்த மூன்று தினங்களும் அமைச்சர் பெருமக்கள் சென்னையில் இருக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டதாக திரித்து கூறப்பட்டுள்ளது. நான் அவ்வாறு குறிப்பிடவில்லை என்றார்.

மேலும் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஒருங்கிணைப்பாளர் துணை ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர்கள் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம் என கூறினார்.

Views: - 46

0

0