ஆன்லைன் ரம்மியால் காவலர் தற்கொலை? திருச்சியில் அதிர்ச்சி.!!

8 August 2020, 5:38 pm
Trichy Police Suicide - Updatenews360
Quick Share

திருச்சி : ஆன்லைன் ரம்மியால் கடன் வாங்கி விளையாடிய காவலர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை அடுத்துள்ள அனலை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் என்பவரது மகன் ஆனந்த் (வயது 26). இவர் திருச்சி மாவட்டம், வாத்தலை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு பணி முடித்து வீட்டுக்கு சென்றவர், இரவு வீட்டில் அனைவரும் உறங்கிய பின்னர் வீட்டுக்கு பின்னால் சென்று அங்குள்ள மாட்டுக் கொட்டகையில் தனது தாயின் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார்.

இன்று அதிகாலை மாட்டு கொட்டகைக்கு வழக்கம் போல் சென்ற கோவிந்தராஜ், தனது மகன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதர்ச்சி அடைந்தார். இது குறித்து ஜீயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் ஆனந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ஆனந்திற்கு ஆன்லைனில் ரம்மி சீட்டு ஆட்டம் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதற்காக தன்னுடன் பணிபுரியும் நண்பர்களிடம் அவ்வப்போது கடன் வழங்கி உள்ளார். கடன் பெற்ற பணத்தை திரும்பி கொடுக்க முடியாமல் கடந்த சில நாட்களாக அவர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அனந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா எனவும் காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 7

0

0