‘எங்க வண்டியவா மடக்குற’… சோதனையின் போது சப் இன்ஸ்பெக்டர்கள் மீது தாக்குதல்… 3 ரவுடிகள் கைது – 2 பெண்களுக்கு வலைவீச்சு..!!

Author: Babu Lakshmanan
4 July 2023, 10:03 pm

திருச்சியில் சப் இன்ஸ்பெக்டர்கள் மீது தாக்குதல் நடத்திய 3 ரவுடிகள் கைது – தலைமறைவான 2 பெண்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருச்சி அரியமங்கலம் காவல் நிலையத்தில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சந்திரமோகன். இவர் ரோந்து வாகனத்தில் அரியமங்கலம் ஸ்டாலின் நகர் டாஸ்மாக் மதுபான கடை அருகாமையில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியே வந்த பொலிரோ பிக் அப் வாகனத்தை சோதனை இட்ட போது, வாகனத்தில் இரண்டு அரிவாள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பொலிரோ பிக் அப் வாகனத்தில் வந்த இருவரையும் போலீசார் பிடிக்க முற்பட்டபோது, அதில் வந்த ரவுடிகளுக்கும், அவர்களுக்கு ஆதரவாக மேலும் பெண்கள் உள்பட 3 பேரும் சேர்ந்து, 5 பேர் கொண்ட கும்பல், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் சந்திரமோகன் மற்றும் வெற்றிமணியை ஆகிய இருவரையும் கையால் தாக்கி விட்டு பேட்ரோல் வாகனத்தை சேதப்படுத்தினர். மேலும், அரிவாளை காட்டி மிரட்டி விட்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து சந்திரமோகன் அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் தப்பி ஓடிய பிரபல ரவுடிகள் அரியமங்கலம் அண்ணா நகர் முருகன் கோவில் தெருவை சேர்ந்த முத்துக்குமார்(29), அவரது சகோதரர் இளவரசன் மற்றும் நண்பர் அரியமங்கலம் திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (23) ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும், தப்பி ஓடிய ரவுடி முத்துகுமாரின் சகோதரிகளான ரேணுகாதேவி, கிருஷ்ணவேணி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

  • sridevi mother did not accept that sridevi to marry rajinikanth ரஜினிகாந்தின் காதலை குழி தோண்டி புதைத்த ஸ்ரீதேவியின் தாயார்- அடப்பாவமே!