ரயிலில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் பரிதாப பலி… கல்லூரி முடிந்து வீடு திரும்பிய போது நிகழ்ந்த சோகம்…!!

Author: Babu Lakshmanan
5 March 2024, 9:03 am

திருச்சி அருகே ரயில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் பலி – உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள மணிகண்டன் நகரைச் சோந்த மோகன்ராஜ் மகன் அஸ்வின்சா்மா (18). இவா் திருச்சியில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்தாா். தினம்தோறும் மணப்பாறையில் இருந்து திருச்சிக்கு ரயில் வந்து செல்வது வழக்கம்.

அதன்படி, நேற்று காலை கல்லூரிக்கு வந்துவிட்டு மாலை மீண்டும் மணப்பாறைக்கு ரயிலின் கதவின் அருகே நின்ற சென்று கொண்டிருந்தார்.

ரயில் திருச்சி மாவட்டம் அடுத்துள்ள பெரிய ஆலம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அஸ்வின்சா்மா நிலை தடுமாறி ரயிலிருந்து கீழே விழுந்தாா். இதனைக் கண்ட சகபயணிகள் உடனடியாக ரயிலின் அவசர நிறுத்த சங்கிலியை இழுத்துனர். இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது.

உடனடியாக அவரை காவல் துறையினர் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அஸ்வின்சா்மா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருச்சி ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!