ஊரடங்கு உத்தரவு எதிரொலி… ஐதராபாத்தில் தவிக்கும் தமிழக ஓட்டுனர்கள்!

26 March 2020, 6:55 pm
lorry updatenews360
Quick Share

ஊரடங்கு உத்தரவால் எங்கும் நகர வழியின்றி, ஐதராபாத்தில் தமிழக லாரி ஓட்டுனர்கள் சிலர் தவித்து வருகின்றனர்.

தமிழக லாரிகள் சரக்கு ஏற்றிக் கொண்டு ஐதராபாத் சென்றுள்ளது. திரும்புவதற்கு முன்பாக ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. இதனால் அவர்கள், தமிழகம் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.

இதுதொடர்பாக லாரி ஓட்டுனர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில், தாங்கள் உணவின்றி, குடிநீர் இல்லாமல் தவிப்பதாக கூறினர். மேலும் பலர் இதுபோல் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் சிக்கியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

ஐதராபாத்தில் உணவின்றி சிரமத்திற்கு உள்ளாகி வரும் தங்களுக்கு தமிழக அரசு உடனடியாக சொந்த ஊர்க்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அவர்கள் உருக்கமுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply